விழுப்புரம்: 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று விழுப்புரம் மாவட்ட காவல் மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் திரு. த. மோகன், இ.ஆ.ப அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி ஆயுதப்படை காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். விழுப்புரம் சரக காவல் துறை துணை தலைவர் திரு. பாண்டியன் IPS., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS., அவர்கள் முன்னிலை வகித்தார். விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படையினரின் அணிவகுப்பை காவல் ஆய்வாளர் திரு.முத்துகுமார் தலைமையில் கம்பீரமாக அணிவகுப்பு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாடு காவல்துறையில் விழுப்புரம் மாவட்டத்தில் 10 வருடங்கள் சிறப்பாக பணிபுரிந்த 65 காவல்துறையினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 30 காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களின் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பதக்கம் பெற்ற காவல்துறையினரையும், மாவட்ட ஆட்சியர் அவர்களின் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற காவல் துறையினரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஶ்ரீநாதா IPS., அவர்கள் பாராட்டினார்.