திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட அமர்வு நீதிமன்றம், கூடுதல் அமர்வு நீதிமன்றம் மற்றும் போக்சோ நீதிமன்ற காவலர்களுக்கான ஆய்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப. சரவணன்,இ.க.பா., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முக்கய கொலை, கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் போக்சோ வழக்குகள் என நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், மேலும் விசாரணைக்கு சாட்சிகளை குறிப்பிட்ட நேரத்தில் ஆஜர்படுத்தி வழக்கு விசாரணையை விரைவாக முடித்து, சம்மந்தப்பட்ட வழக்குகளின் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.
மேலும் கடந்த இரண்டு மாதங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில், நீதிமன்ற விசாரணையில் இருந்த கொலை மற்றும் போக்சோ வழக்குகளின் சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வழக்கினை விரைவாக முடித்து, மேற்படி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க காரணமாக இருந்த நீதிமன்ற காவலர்களான ராதாபுரம் காவல் நிலைய பெண் தலைமை காவலர் திருமதி. திருமணி, தாலுகா காவல் நிலைய முதல் நிலை பெண் காவலர் திருமதி. சுந்தரவள்ளி, மானூர் காவல் நிலைய முதல் நிலை பெண் காவலர் திருமதி. பத்மாவதி, தேவர்குளம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் திரு. பிரேம்குமார் மற்றும் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலைய முதல் நிலை பெண் காவலர் திருமதி. கார்த்திகா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப அவர்கள் (19.08.2022), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து பாராட்டி பரிசு வழங்கி வெகுமதி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் சிறப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மாரிராஜன் அவர்கள், மாவட்ட குற்ற ஆவணக்காப்பக பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. ஆதிலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.