மதுரை: மதுரை மாவட்டத்தில் திருமங்கலம்,உசிலம்பட்டி, சமயநல்லூர் ஆகிய பகுதிகளிலும் மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதிகளில், பகல் நேரங்களில் பூட்டிய வீடுகளில் பூட்டை உடைத்து உள்ளே இருக்கும் பணம், நகை மற்றும் வீட்டு உபயோகபொருட்களை திருடும் சம்பவங்கள் காவல் நிலையங்களில் தாக்கலாகி வந்துள்ளது.
இதுபோன்ற பிரச்சனைகளை தடுக்கும் விதமாகவும், குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவ்விசாரணையில், மேற்கண்ட இடங்களில் பகல் வேளைகளில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட ராஜாக்கனி 29 சுந்தரம் 32 தங்கப்பாண்டி 31 ஆகியோர் என தெரியவந்தது.
மேற்கண்ட நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து மேற்கண்ட இடங்களில் திருடிய பணம் ரூ.1,10,000/- நகை – 27. 600 GMS, LED-TV- 4, மொபைல் போன்கள் -3, லேப்டாப் -1 மற்றும் வீட்டு உபயோகபொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட மொத்த சொத்தின் மதிப்பு சுமார் ரூ.6,80,000/- ஆகும். மேற்கண்ட 3 குற்றவாளிகளும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு வழக்கின் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை நேரில் அழைத்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்கள்.
மேலும், மதுரை மாவட்டத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்கள் எச்சரித்து உள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்