திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் எடையூர் காவல் சரகம் ஆரியலூர், கீழத்தெருவை சேர்ந்த கரிகாலன் மகன் ரஜினி @ பெரிய ரஜினி என்பவர் 2021 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக, எடையூர் பகுதியை சேர்ந்த 07 நபர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தஞ்சாவூர் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற (PCR Court) விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று 19.01.2023 குற்றவாளிகள் 1.ராஜேஷ், த/பெ தர்மராஜ், சிவன்கோவில் தெரு, வடசங்கேந்தி 2.மகாதேவன், த/பெ சண்முகவேல், மெயின் ரோடு, எடையூர் 3.ஆனந்த் த/பெ தர்மராஜ், சிவன்கோவில் தெரு, வடசங்கேந்தி ஆகிய 03 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூபாய்.13,500/- அபராதமும் வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பாக செயல்பட்ட எடையூர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ் குமார் அவர்கள் பாராட்டினார்கள்.