கரூர்: கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 22.01.2022 இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சுந்தரவடிவேல் அவர்கள் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஆளிர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மேலும் கரூர் மாவட்டத்தில் பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களை விரைந்து கண்டுபிடித்து சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகள் மற்றும் காவலர்களை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து நற்சான்றிதழ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் அவர்கள், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. கீதாஞ்சலி அவர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.