பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய குற்ற எண் 14/18 U/s 294(b),506(i) IPC & 6 of POCSO Act -ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கின் குற்றவாளி கருப்பையா 23 என்பவரை கைது செய்தனர்.
இவ்வழக்கினை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி குற்றவாளிக்கு ஏழு வருட கடுங்காவல் தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்தார்.
இந்த தண்டனையை எதிர்த்து குற்றவாளி சென்னை உயர் நீதிமன்றத்தில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு செய்திருந்தார்.
வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்றம் 04.02.2021 அன்று கருப்பையாவின் தண்டனையை உறுதி செய்தது. தண்டனை உறுதியானதை தொடர்ந்து எதிரி தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில் குற்றவாளியை தேட காவல் ஆய்வாளர் திருமதி. ஜெயசித்ரா அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உதவி ஆய்வாளர் திருமதி. விஜயலட்சுமி, திரு.மாறன் முதல் நிலை காவலர் திருமதி.த.லட்சுமி ஆகியோர் புறப்பட்டு குற்றவாளி இருக்கும் இடத்தை கண்டறிந்து 01.09.21 அன்று கைது செய்து கனம் மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்களிடம் ஆஜர்படுத்தி பின்னர்.குற்றவாளியை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இத்தகைய செயலை பாராட்டி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச. மணி அவர்கள் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை காவல்துறையினரை நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
மேலும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட போக்சோ வழக்கில் குற்றவாளிகளுக்கு 10 நாட்களில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சிறப்பாக செயல்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.ஜெயசித்ரா மற்றும் தலைமை காவலர் திருமதி செல்வராணி ஆகியோரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை