திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், நன்னிலம் கச்சேரி தெருவை சேர்ந்த மணி என்பவரின் மகன் முருகன் என்பவர் நன்னிலம் அக்ரஹரதத்தெருவை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் ஆறுமுகத்தின் இடத்தை வாடகைக்கு பிடித்து மெஸ் நடத்தி வந்துள்ளார். அந்த பழக்கத்தில் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆறுமுகத்திடம் முருகன், ரூபாய் ஒரு லட்சம் கடன் பெற்று அதற்க்கு தின வட்டியாக தினந்தோறும் ரூபாய் 200/- கொடுத்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக வட்டி பணம் கொடுக்கவில்லை.
அதன் காரணமாக (02.08.2022) முருகனின் மெஸ்க்கு வந்த ஆறுமுகம் வாங்கிய பணத்தை உடனடியாக கொடு இல்லை எனில் உன் வீட்டு பத்திரங்களை கொடு என சொல்லி காமகுரோதமாக திட்டியும், கொலை மிரட்டல் விடுத்ததாக , நன்னிலம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு குற்றவாளி ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனார். சிறப்பாக செயல்பட்ட நன்னிலம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ் குமார், அவர்கள் பாராட்டினார்கள்.