திருவள்ளூர் : போலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் திரு. சார்லஸ் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட பொது செயலாளர் திரு. பாண்டியன் மற்றும் மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி. ரமீஜா அவர்களும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திருவள்ளூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. துரைபாண்டியன் அவர்களை மரியாதையின் நிமித்தமாகவும் தமிழக காவல்துறையில் சிறந்த புலனாய்வு பணிக்காக திரு.துரைபாண்டியன் அவர்களுக்கு முதல்-அமைச்சர் விருது அறிவிக்கப்பட்டதற்காகவும், வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
திருவள்ளூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. துரைபாண்டியன், இதற்கு முன் வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. துரை பாண்டியன் என்றாலே, ரவுடிகள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடிக்கும் அளவுக்கு, ரவுடிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றிய போது, செம்மரக்கட்டை கடத்தலுக்கு எதிராக பல வழக்குகளை திறம்பட கையாட்டுள்ளார்.
திருவள்ளூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. துரைபாண்டியன் அவர்களின், புலன் விசாரணை பணியில் மிகச்சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணி புரிந்ததை பாராட்டும் வகையிலும் 2020-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்-அமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணி பதக்கத்தை வழங்கிட, முதல்-அமைச்சர் ஆணையிட்டு உள்ளார். காவல் புலன் விசாரணைக்கான முதலமைச்சர் பதக்கம் பெற உள்ள காவல் துணை கண்காணிப்பாளர் திரு. துரைபாண்டியன் அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.