திருவாரூர்: இந்தியாவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் பணிகளையும் ஆராய்ந்து மத்திய அரசு திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை காவல் நிலையத்தை சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழை இன்று (11.02.2025) திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் திரு.M.ஜோசி நிர்மல் குமார், இ.கா.ப., அவர்கள் முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் திரு.A.கழனியப்பன் அவர்களிடம் வழங்கினார்கள்.
அப்போது தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.ஜியாவுல் ஹக், இ.கா.ப., அவர்கள், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் மற்றும் முத்துப்பேட்டை துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.M.ஆனந்த் அவர்கள், திருவாரூர் மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.A.பிலிப் பிராங்களின் கென்னடி அவர்கள் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.P.ராஜா ஆகியோர் உடனிருந்தார்கள்.