மதுரை: தமிழக அரசு மாநிலத்தில் சிறந்த காவல் நிலையங்களாக 41 காவல் நிலையங்களை தேர்வு செய்து மாவட்ட வாரியாக விருது வழங்கியுள்ளது. இதில் குற்றங்களை கண்டுபிடித்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்தது, குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது, சட்டம்- ஒழுங்கைப் பராமரித்து, விபத்துக்களை குறைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது என பல்வேறு வகையில் சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையங்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி நகர் காவல் நிலையம் சிறப்பான செயல்பாட்டின் அடிப்படையில், சிறந்த காவல் நிலையமாக விருதுக்கு தேர்வாகியுள்ளது. இதற்கான விருதினை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் உசிலம்பட்டி நகர் காவல் ஆய்வாளர்,. திரு. விஜயபாஸ்கர் அவர்களிடம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்கள்.
அப்போது உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும் வாழ்த்து தெரிவித்ததுடன், வரும் நாட்களில் சிறப்பாக செயல்பட அறிவுரை வழங்கினார்கள். கடந்த வருடமும் இதே காவல் நிலையம் சிறந்த காவல் நிலையத்திற்கான விருதினை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி