மதுரை : தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்யத்தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. மதுரை மாநகரிலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பல இடங்களில் தெருக்கள் தண்ணீர் தேங்கியதால் மாறியதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, காவல்துறையினர் களத்தில் இரங்கி உள்ளது பாராட்டுதலுக்குரியது. தங்களுடைய பணி போக்குவரத்தை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் போது என்று இல்லாமல், சாலையை சரிசெய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர்.
மதுரை மாநகர் பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் இன்று 18.11.2020- ம் தேதி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாகவும் மற்றும் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையிலும் இருந்த பள்ளத்தை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. பால்தாய் அவர்கள் JCB மூலமாக பள்ளத்தை நிரப்பி பொதுமக்கள் சாலையில் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள வழி வகை செய்து பொது மக்களின் பாராட்டைப் பெற்றார்.
திரு.ஜஸ்டின் சரவணன்