சேலம் : சேலம் மாவட்டம், தாரமங்கலம் அம்பேத்கார் நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது கணவருடன் சேலம் மாவட்ட கணினி சார் குற்ற காவல் நிலையத்திற்கு வந்து தனது பெயரிலான ஆதார் கார்டு எண்ணை வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தை இணைத்து போலியாக ஆவணம் தயாரித்து சிம் கார்டுகள் விற்பனை செய்து வருவதாக கொடுத்த புகாரின் பேரில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார் அவர்களின் உத்தரவின் பேரில் சேலம் மாவட்ட கணினி சார் குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் திரு.செல்லப்பாண்டியன் அவர்களின் வழிகாட்டுதலின்படி திரு கைலாசம் காவல் ஆய்வாளர் கணினிசார் குற்ற காவல் நிலையம் சேலம் மாவட்டம் அவர்களின் தலைமையிலான காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வோடாபோன் நிறுவனத்தின் மாவட்ட விநியோகிப்பாளரான அம்மன் ஏஜென்சியில் நேரடி விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வரும் ஓமலூர் செட்டிப்பட்டி, காட்டுவளவு பகுதியை சேர்ந்த குமரேசன், என்பவர் தனது மாதாந்திர விற்பனை எல்லையை அடையும் பொருட்டு வோடாபோன் செல்போன் சிம் கார்டுகளை தன்னிடம் நேர்மையான முறையில் உரிய ஆதாரங்களோடு சிம் கார்டு வாங்கும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விபரம் ஆதார் கார்டு விவரம் மற்றும் போட்டோ போன்றவற்றை முறைகேடாக பயன்படுத்தி விற்பனை செய்து கமிஷன் பெற்று வந்துள்ள விபரம் தெரிய வந்துள்ளது.
ஆதனால் மேற்படி காவல்துறையினர் சேலம் மாவட்ட கணினி சார் குற்ற காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடுவர் நீதிமன்றம் மூன்றில் ஆஜர் படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் என்ற வலைதளத்தின் மூலம் எந்த ஒரு சாமானியமும் தனது தனிப்பட்ட ஆதாரங்களை பயன்படுத்தி பெறப்பட்ட சிம்கார்டுகள் பற்றி விபரம் தெரிந்து கொள்ளவும், அது பற்றி ஆன்லைன் வழியாக புகார் தெரிவித்து முறைகேடான சிம் கார்டுகளை ரத்து செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. என்றும் இவ்வாறாக சாலையோரங்களில் குடை அமைத்து போலியான ஆவணங்களின் அடிப்படையில் ஆக்டிவேட் செய்யப்படும் சிம் கார்டுகளை பயன்படுத்தி சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்துவதால் இது போன்ற செயல்களை தடுக்கும் வகையில் மேற்படி குற்றங்களில் ஏற்படும் குற்றவாளிகளுக்கு ஏழு வருடங்களுக்கு குறையாது சிறை தண்டனை பெறத்தக்க வகையிலான சட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இரும்புக்கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இணையம் சார்ந்த குற்றம் மற்றும் பண இழப்பு ஆகியவை குறித்த புகார்களை 1930 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி மூலமாகவோ அல்லது www.cybercrime.gov.in என்ற போர்டல் மூலமாகவோ காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்