மதுரை : கொரோனா தொடர்பாக தகவல்களை தெரிந்துகொள்வதற்கு குறிப்பிட்ட லிங்கை கிளிக் செய்யவேண்டும் என எஸ்.எம்.எஸ் அல்லது மெயில் உலா வந்தன. குறிப்பிட்ட லிங்கை கிளிக் செய்தால் உங்களது முக்கிய தகவல்கள் மற்றும் வங்கி கணக்குகள் குறித்த விவரங்கள் திருடப்படும் என தமிழக காவல்துறை அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தின் வாயிலாக ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது இது குறித்து சிபிஐ மற்றும் இன்டர்போல் வங்கி ட்ரோஜன் (செர்பரஸ் மென்பொருள்) என்ற தீங்கிழைக்கும் மென்பொருளானது கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு விவரங்கள் உட்பட மொபைல் போனில் சேமிக்கப்பட்டுள்ள அனைத்து நிதி தரவுகளையும் திருடக்கூடும் என்று எச்சரித்துள்ளது. ஆகவே கொரோனா தொடர்பாக எஸ்.எம்.எஸ் மற்றும் மெயிலில் எவ்வித லிங்க் வந்தால் அதனை கிளிக் செய்து பார்க்க வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கிறது.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்