கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி நகரில் வருவாய் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தினர். வாகனம் நிறுத்தாததால், அதிகாரிகள் சினிமா பாணியில் துரத்தி பிடித்தனர். வேனில் சோதனை செய்த போது அதில் 78 பிளாஸ்டிக் பைகளில் 3900 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை கண்டு பிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்