கோவை : நாமக்கல் மாவட்டம் பரமத்தி ரோட்டில் உள்ள இபி காலனியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகன் திவேஷ்வர் வயது 20. இவர் கோவை சிங்காநல்லூர் ராமானுஜம் நகரில் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று நள்ளிரவில் 4 ஆசாமிகள் இவரது வீட்டின் கதவை தட்டினார்கள். இவர் கதவை திறந்து பார்த்தார். அப்போது 4 பேர் உள்ளே புகுந்து அவரை மிரட்டி அவர் அணிந்திருந்த 2 பவுன் செயின், லேப்டாப் ,செல்போன்கள், கைக்கடிகாரம், ஒரு ஏடிஎம் கார்டு ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஷாக், விஜய் ,சேதுபதி, அருண் விக்கி ஆகியோரை தேடி வருகிறார்கள்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்