செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் சிங்க பெருமாள் கோவில் ஊராட்சியில் சிங்கபெருமாள் கோவில், திருத்தேரி, பாரேரி, விஞ்சியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வணிக கட்டடங்கள் உள்ளன.
இந்த பகுதி மக்கள் குற்றம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு 7 கி.மீ.,தொலைவில் உள்ள மறைமலைநகர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்கும் நிலை இருந்தது. எனவே மறைமலைநகர் காவல் நிலையத்தை பிரித்து இந்த பகுதியில் புதிதாக காவல் நிலையம் அமைக்க வேண்டும் பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சியின் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்த கடந்த 2023ம் ஆண்டு புதிய காவல் நிலையம் அமைக்க முதல்வர் மு க ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். தற்காலிகமாக காவல் நிலையம் அமைக்க திருக்கச்சூர் சாலையில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் ரிப்பன் வெட்டி காவல் நிலையம் திறக்கப்பட்டது.

இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலை மற்றும் மகேந்திரா வால்ட் சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல லஞ்சம் வாங்காமல் வேலை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா. செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன். தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக். துணை காவல் ஆணையர் மகேஸ்வரி. காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன். காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய திமுக கழக செயலாளர் ஆப்பூர் சந்தனம். காட்டாங்குளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராஜன் .மத்திய ஒன்றிய அமைத்தலைவர் மற்றும் வனக்குழு தலைவர் விஜி ஆலப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திருமலை. சமூக ஆர்வலர் சிங்கை கணேஷ் மற்றும் காவல் துறை அலுவலர்கள் அரசு அலுவலகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்
















