வேலூர் : வேலூர் மாவட்டம் மத்திய சிறையில் உள்ள தண்டனை சிறைவாசி மாதப்பன் @ மாதேஷ் தேன்கனிக்கோட்டை கிருஷ்ணகிரி மாவட்டம் என்பவரை AR PC 460 சுரேஷ், PC 2645 விஜயகாந்த், WPC 2205 ஜெயானா ஆகியோர் வழிக்காவல் செய்து கைதியை தேன்கனிக்கோட்டை DMC JM, Assistant Session நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மீண்டும் வேலூர் மத்திய சிறையில் அடைக்க வந்த போது நேற்று (15.12.2022), தேதி சுமார் 1:30 மணியளவில் கைதி சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறியதால் காவலர் சுரேஷ் கைதியை சிறை வளாகத்தில் இருசக்கர வாகன நிறுத்தும் பின்புறம் அழைத்துச் சென்றபோது திடீரென கைதி மேற்படி இடத்திலிருந்து துருப்பிடித்த இரும்பு கம்பியால் காவலர் சுரேஷ் வயிறு தோள்பட்டை முதுகில் குத்தியதால் காயமடைந்தவரை சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. (16.12.2022), சிகிச்சையில் இருந்த காவலர் சுரேஷ் என்பவரை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்கள் நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்