மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த வேப்பங்குளத்தை சேர்ந்த முத்துமாரியப்பன் மகன் பத்மா ஈஸ்வரன்என்பவர் கமுதியில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு 26.03.22-ம் தேதி முதல் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு இன்று சிகிச்சைக்காக அழைத்து வந்த போது தப்பி ஓடி விட்டார்.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.