சிவகங்கை: சிஐடியு சார்பில் காரைக்குடி ஐந்து விலக்கு அருகில் 139 வது மே தின பொதுக்கூட்டம் (01.5.25) மாலை 06.00 மணி முதல் 08.30 மணி வரை சிவகங்கை மாவட்ட சிஐடியு தலைவர் தோழர் ஆர் வீரய்யா தலைமையில் நடைபெற்றது.சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் காரைக்குடி நகர நிர்வாகிகள் தோழர்கள் ஏ. சுப்பிரமணியன், ஏ. வெங்கிட்டு, முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தோழர் ஏ. சேதுராமன், மாவட்ட பொருளாளர் தோழர் எம். தட்சிணாமூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர்கள் தோழர்கள் கே ஆர். அழகர்சாமி, எஸ். உமாநாத் ஆகியோர் உரையாற்றினார்கள். திண்டுக்கல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தோழர் ஆர். சச்சிதானந்தம் அவர்கள் சிறப்புரையாற்றி பொதுக்கூட்டத்தை நிறைவு செய்தார்.
சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் தோழர்கள் வேங்கையா, முருகன், எஸ். முருகேசன், எல்.சிவகுமார் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள், ஆட்டோ, மின்வாரியம், டாஸ்மாக், அரசு போக்குவரத்து, அரசு விரைவு போக்குவரத்து, உள்ளிட்ட பல்வேறு அரகங்களின் மாவட்ட பொறுப்பாளர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் ஏ ஆர்.மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் அய்யம்பாண்டி, சுரேஷ், மணியம்மா, வி.கருப்புசாமி, கே.வீரபாண்டி, எஸ் முத்துராமலிங்க பூபதி மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.பொதுக் கூட்டத்தில் சிஐடியு மற்றும் CPI(M) தோழர்களும் குடும்பங்களுடன் சுமார் 220 பேர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி