திருச்சி: திருச்சி மாவட்டம், ராம்ஜி நகர் காவல் நிலைய சரகம், திருச்சி வழ திண்டுக்கல் சாலையில் கடந்த 06.11.2019ம்; தேதி இரவு, வண்ணாங்கோவில் பகுதியில் மனைவி மற்றும் பேரனுடன் டூவீலரில் வந்த முதியவர் மீது ஜீப் மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் ஓடிவந்து பார்த்த போது, பாட்டியும், பேரனும் எழுந்துவிட, முதியவர் மட்டும் உடலில் அசைவே இல்லாமல் கிடந்தார்.
அவர், இறந்து விட்டதாக அனைவரும் நினைந்திருந்தனர். அந்த நேரத்தில் தான் வழக்கமான நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் பிரபு, அசைவில்லாமல் கிடந்த முதியவருக்கு நாடி துடிப்பு இருப்பதை உறுதி செய்தார். உடனே, அவருக்கு செயற்கை சுவாசம் அளித்து காப்பாற்ற முயற்சி செய்தார்.
அதன் பலனாக சிறிது நேரத்தில் முதியவர் கண் விழித்தார். மேற்கண்ட, முதியவருக்கு உயிர் கொடுத்த காவலர் பிரபுவை பாராட்டி இன்று 13.12.2019 ம் தேதி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜியாவுல் ஹக், இ.கா.ப., அவர்கள் வெகுமதியும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கௌரவித்தார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி