சேலம் : சேலம் கடந்த (04/12/2021) ஆம் தேதி காலை 6:00 மணிக்கு சுரேஷ் (35), செங்கோடம்ப்பாளையம் ராக்கி பட்டி ஆட்டையாம்பாளையம் என்பவர் டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனம் TN 30 A 9584 என்ற வாகனத்தில் கந்தசாமி (44), சுந்தர பெருமாள் கோயில் தெரு சேனை பாளையம் ராச்சிப்பட்டி என்பவரை வண்டியில் பின்னால் உட்கார வைத்துக்கொண்டு சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலை ராக்கெட் பற்றி பேருந்து நிலையம் அருகில் வரும்போது அதே திசையில் அர்ஜுனன் (28)குடவாசல் தாலுக்கா திருவாரூர் என்பவர் TN 66 XL 6499 என்ற வண்டியை அஜாக்கிரதையாகவும் அதிவேகமாகவும் ஓட்டி வந்து TVXL வாகனத்தின் மீது மோதி சம்பவ இடத்திலேயே பின்னால் உட்கார்ந்து வந்த கந்தசாமி இறந்துவிட்டார். வாகனத்தை ஓட்டி வந்த சுரேஷ் பலத்த காயமடைந்தார். இது சம்பந்தமாக ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் சட்ட பிரிவின்படி வழக்கு பதிவு செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்நிலையில் சாட்சிகளின் அடிப்படையில் அரசு கூடுதல் வழக்கறிஞர் திருமதி.புனித அவர்களால் குற்றவாளியின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு இன்று நீதிபதி திரு.யுவராஜ் அவர்களால் மேற்கண்ட குற்றவாளிக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்