கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா. ப,அவர்களது வழிகாட்டுதலின் பேரில் சாலை விபத்து தடுப்பு மற்றும் போக்குவரத்து விதி மீறல்கள் குறித்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒரு வழிப்பாதை ‘U’ Turn பாதசாரிகளுக்கான குறுக்கு நடை பாதைகள் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து சீரமைப்பு நடவடிக்கைகளை கோவை மாநகரம் முழுவதும் மேற்கொண்டு வருகிறது. மேலும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக காவல் ஆணையர் அவர்களது உத்தரவின்படி (28/6/2023), ஆம் தேதி இரவில் இருந்து கோவை மாநகரம் முழுவதும் Storming Operation துவக்கப்பட்டு சாலைப்போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஒரு பகுதியாக சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரிவினர் ஆகியோர் கோவை மாநகரில் 42 இடங்களில் வாகன சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
சோதனையின் போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது தொடர்பாக 141 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து தெரிவிக்கும் பொழுது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க 4 அல்லது இருசக்கர வாகனங்களில் வருவோரிடம் மது அருந்தினால் தங்களை அழைத்துச் செல்வதற்கு வசதியாக தனியாக வாகன ஓட்டிகளை வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதேபோன்று கோவை மாநகரில் உள்ள மதுபான கூடங்களின் உரிமையாளர்கள் அவர்களது மதுபான கூடங்களுக்கு மது அருந்த வாகனங்களில் வருவோரிடம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது எனவும் மேலும் மது அருந்த வாகனத்தில் வர நேரிட்டால் அவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல தங்களுடன் வாகன ஓட்டிகளை அழைத்துவர வேண்டும் என வலியுறுத்த வேண்டும் என்றும் அவ்வாறு வாகன ஓட்டிகள் உடன் வராதவர்களுக்கு மதுபானக்கூடங்களின் உரிமையாளர்கள் நம்பிக்கையான வாகன ஓட்டிகளை ஏற்பாடு செய்துதர வேண்டும் என்றும் கோவை மாநகர காவல் ஆணையர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்