திருவாரூர்: சாலை விபத்தில் இறந்த திருவாரூர் மாவட்ட காவலருக்கு AXIS வங்கி நிர்வாகம் 30 லட்சம் இழப்பீடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மூலமாக வழங்கியது திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலர் 1466 திரு.புகழேந்தி
த/பெ.காமராஜ் பன்னாகன அள்ளி தருமபுரி மாவட்டம் என்பவர் பணிபுரிந்து வந்தநிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தருமபுரி சென்றபோது அவர் சாலை விபத்தில் இறந்துவிட்டார். மேற்படி காவலர் புகழேந்தி பணியிலிருந்தபோது தனது சம்பள கணக்கை AXIS வங்கியில் தொடர்ந்துவந்துள்ளார். இந்நிலையில் மேற்படி AXIS வங்கி நிர்வாகம் இறந்த காவலருக்கு
POLICE ACCIDENT PROTECTION COVER என்ற திட்டத்தின் அடிப்படையில் அவரது குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் தொகையை இழப்பீடாக அறிவித்துள்ளது.
அதற்கான காசோலையை இன்று (17.02.22) மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் இறந்த காவலரின் குடும்பத்தினரிடம் வங்கி மேலாளர் திரு.திருநாவுக்கரசு
மற்றும் வங்கி கணக்கு மேலாளர் திரு.வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலையில்
வழங்கினார்கள்
மேலும் பாதிக்கப்பட்ட காவலர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கிய AXIS வங்கி நிர்வாகத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அந்தோணி ராஜா