திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 08.12.2020 ம் தேதி காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிவேகத்தில் சென்றதற்காக 12 வழக்குகளும், சிக்னலில் விதியை மீறியதற்காக 41 வழக்குகளும், செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தில் சென்றதற்காக 257 வழக்குகளும், மது அருந்தி வாகனம் இயக்கியதாக 02 வழக்கும், பொருட்களை ஏற்றும் வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்றதாக 94 வழக்குகளும், தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக 771 வழக்குகளும், இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் உட்காரும் நபர் தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக 171 வழக்குகளும், மேலும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக 504 வழக்குகளும், மொத்தம் 1852 வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் முறையான சாலை விதிகளை கடைபிடித்து பயணம் செய்யுங்கள். சாலை விதியை கடைபிடிக்காமல் செல்வதால் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகிறது. சாலை விதியை கடைபிடிப்போம் விபத்துக்களை தவிர்ப்போம்….
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
