திருவள்ளூர் : பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலையை கட்டுக்கடங்காமல் உயர்த்தி விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்துள்ள ஒன்றிய அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தபால் நிலையம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் இந்தியாவில் விலையை குறைக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். ஒன்றிய அரசின் தபால் நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட முயன்ற 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு