மதுரை : சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, நேற்று காலை 29.01.2021 ம் தேதி மதுரை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில், தெற்கு அலுவலகத்தில் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. முகாமை மதுரை சரக இணைப் போக்குவரத்து ஆணையர் திரு.ரவிச்சந்திரன் முன்னிலையில், மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு.சுகுமாறன் அவர்கள் துவக்கி வைத்தார்கள். இந்த இலவச கண் பரிசோதனையை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் திரு.செல்வம் (வடக்கு), திரு.சிங்காரவேலு (தெற்கு), திரு.கார்த்திகேயன் (செயலாக்கம்), மதுரை மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு. திருமலைக்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் திரு.செந்தில்குமார், திரு.மாணிக்கம், திருமதி.அனிதா, மதுரை மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.கணேஷ்ராம், சார்பு-ஆய்வாளர் திரு.அதியமான் மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளியினர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 246 நபர்கள் இலவச கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி