திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்கள் வழங்கிய உத்தரவின் பேரில், சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இன்று (12.01.2026) ஏலகிரிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அர்த்தனாவூர் டான் பாஸ்கோ கல்லூரி மாணவ–மாணவிகளுக்கும், கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு கலைக்கல்லூரி மாணவ–மாணவிகளுக்கும் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் போது இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் போது தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு, அதனை வலியுறுத்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, இரு சக்கர வாகன பேரணி நடத்தப்பட்டு சாலை விதிகளை பின்பற்றுதல், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட விடயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த பொறுப்புணர்வை உருவாக்கும் வகையில் அமைந்தது.
















