திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காங்கேயம் ரோடு பாபு பிரியாணி கடை அருகில் உள்ள மரம் திடீரென்று நடுரோட்டில் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்திற்கு இடையூராக இருந்தது.இதை கண்ட தெற்கு காவல் நிலைய காவலர்கள் திரு.வேடியப்பன்(கா எண் 299) மற்றும் திரு.சதீஸ்(கா எண் 859)அவர்கள் சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.இந்த செயலை செய்த காவலர்களை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய் குமார் (IPS) மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரி நாராயணன் (IPS) அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.