திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கென பொதுமக்கள் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது மீஞ்சூர்-காட்டூர் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கென மீஞ்சூர் அரியன் வாயல் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேம்பாலம் அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் முடிவுற்ற நிலையில் இரண்டாம் கட்டமாக மீஞ்சூர் முதல் அரியன் வாயல் பகுதி வரை சாலையின் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டிற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பேரில் இன்று அரியன் வாயல் பகுதியில் சாலையில் இருபுறம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் சுமை தூக்கும் இயந்திரங்கள் மூலமாக அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்புகள் வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்டாதவாறு மீஞ்சூர் காவல் நிலைய
போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு