சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு. அ.கா. விசுவநாதன் இ.கா.ப., அவர்கள் 12.06.2020 காலை 11:20 மணிக்கு வடக்கு கடற்கரை ராஜாஜி சாலை மற்றும் NSC போஸ் ரோடு சந்திப்பில், பொதுமக்கள், சாலையோரம் வசிக்கும் 300 நபர்களுக்கு காவல் துறையின் சார்பாக, முகக்கவசங்களை வழங்கினார்.
மேலும் C-5 கொத்தவால் சாவடியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட P.V ஐயர் தெரு, ஆச்சாரப்பன் தெரு மற்றும் வரதா முத்தியப்பன் தெரு ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தார்.
உடன் வடக்கு மண்டல இணை ஆணையாளர் திரு.கபில்குமார் C.சரத்கர், இ.கா.ப, மற்றும் பூக்கடை துணை ஆணையாளர் திரு.S.ராஜேந்திரன் இ.கா.ப, ஆகியோர் இருந்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை