மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களா உணவு விடுதிக்கு எதிரில் சாலையோரம் மெத்தையுடன் கூடிய படுக்கையில் இரண்டு மாதம் மதிக்கத்தக்க பெண் குழந்தை கிடந்தது. அந்த குழந்தையின் பெற்றோர் யார் எந்த ஊர் என்று விவரம் எதுவும் தெரியவில்லை. சாலையோரம் எப்படி வந்தது என்றும் தெரியவில்லை வாகனத்தில் செல்லும்போது தவறி கீழே விழுந்ததா, அனாதையாக போடப்பட்டதா என்று தெரியவில்லை. இது குறித்து, தகவல் அறிந்த வாடிப்பட்டி போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த கைக்குழந்தையை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி