சென்னை: கொரானா ஊரடங்கால் இந்தியா முழுவதும் ஏழை, எளிய மக்கள், கூலித் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்போது அதனால் ஏற்படும் மிகப்பெரும் விளைவு பசிக்கொடுமை. பல்வேறு மாநிலங்களில் சொற்ப சம்பளத்துக்காக இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் வழியில் இறக்கும் சம்பவங்களை செய்திகளின் வாயிலாக அறிகிறோம்.
கொரானாவால் ஏற்படும் பாதிப்புகளை விட வாழ்வாதார முடக்கத்தால் பசிக்கொடுமை அதிகரித்து அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. உலகையே புரட்டிப் போட்டுள்ள கொரானா வைரஸின் கோர தாண்டவத்தால், உணவில்லாமல் அனேக மக்கள் வறுமை காரணமாக இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு, இன்று சென்னைக்குட்பட்ட போரூர், ஆலப்பாக்கம், காரம்பாக்கம், ஐயப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், குமனஞ்சவடி, பூந்தமல்லி பகுதிகளில் உள்ள சுமார் 1000 நபர்களுக்கு கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, உணவு இல்லாமல் சாலையோரங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கும் மதிய உணவாக வெஜிடபிள் சாதம், தண்ணீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில், சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் பசித்தோருக்கு உணவு வழங்கும் உன்னத பணியினை இரவு பகலாக செய்து வருகின்றனர்.
l