மதுரை : மதுரை மாநகர் பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டபொம்மன் சிலை அருகில் உள்ள சாலையில் இன்று 23.12.2020- ம் தேதி போக்குவரத்திற்கு இடையூறாகவும் மற்றும் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையிலும் இருந்த பெரிய பள்ளங்களை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. பால்தாய் அவர்களின் முழு முயற்சியால் சிமெண்ட் மற்றும் ஜல்லி கற்கள் மூலமாக தெற்கு போக்குவரத்து காவலர் திரு. முத்துராஜ் (3970) அவர்கள் உதவியுடன் பள்ளத்தை நிரப்பி பொதுமக்கள் சாலையில் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள வழிவகை செய்துகொடுத்து போக்குவரத்து காவல்துறையினர் பொது மக்களின் பாராட்டைப் பெற்றனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.A.வேல்முருகன்