செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் பகுதியில் வசித்து வருபவர் கணபதி என்பவரது மனைவி செண்பகவவள்ளி வயது (75). இவர் இன்று காலை வீட்டில் இருந்து எதிரே உள்ள வளர்ப்பு நாய் குட்டிக்கு சாப்பாடு வைப்பதற்கு செல்வதற்காக சாலையைகடக்க முயன்றுள்ளார். அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று எதிர்பாராத விதமாக மூதாட்டி மீது பலமாக மோதியது. இதில் மூதாட்டி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு வாகனம் நிற்காமல் மின்னல் வேகத்தில் பறந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் விபத்தில் பலியான மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த தாலுகா காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அக்கம் பக்கத்தில் சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனத்தை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் நடந்து ஒரு மணிநேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் சடலம் மீட்கப்படாமல் தாமதமானது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்
















