திருவண்ணாமலை: வந்தவாசி உட்கோட்டம், கீழ்கொடுங்காலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, புன்னை to ஓசூர் செல்லும் சாலையின் குறுக்கே மழையின் காரணமாக புளியமரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த வந்தவாசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.V.விஸ்வேஸ்வரய்யா அவர்கள், கீழ்கொடுங்காலூர் காவல் ஆய்வாளர் திரு.P.புகழ், மாவட்ட பேரிடர் மீட்பு குழு காவலர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் உதவியுடன் விரைந்து சென்று மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
மேலும் தெள்ளார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொடியாலம் கிராமத்தில் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்த மரத்தை தெள்ளார் காவல் ஆய்வாளர் திருமதி.R.சோனியா மற்றும் மாவட்ட பேரிடர் மீட்புக் குழு காவலர்கள் அங்கு விரைந்து சென்று சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களை சாலையில் விழுந்த மரத்தைனர்.
இச்செயலை செய்த காவல்துறையினருக்கு, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி மாவட்ட அளவிலும், உட்கோட்ட அளவிலும் 80 பேரிடர் மேலாண்மை பயிற்சி முடிந்த காவலர்கள் அடங்கிய 370 காவலர்கள் மழை வெள்ள மீட்பு பணிக்கு தாயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொதுமக்கள் புகார் மற்றும் உதவிக்கு மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை எண்:1077 அல்லது மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டு அறை எண்: 04175-233266 அல்லது ஹலோ திருவண்ணாமலை போலீஸ் 9988576666 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.