திருவாரூர்: நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக திருவாரூர் நாகை தேசிய நெடுஞ்சாலையில் (NH-67) வாழவாய்க்கால் அருகில் பிரதான சாலையில் இருந்த புங்கை மரம் முறிந்து விழுந்து அப்பகுதியில்இன்று அதிகாலை முதல் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
இச்சம்பவம் அறிந்த திருவாரூர் காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் என்பவர் தலைமையிலான காவலர்கள் மற்றும் திருவாரூர் நெடுஞ்சாலை ரோந்து காவலர்கள் அவ்விடத்திற்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
சம்பவம் அறிந்து விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் பாராட்டினார்கள்.
திருவாருரிலிருந்து நமது குடியுரிமை நிருபர் அந்தோணிராஜா