இராமநாதபுரம் : இராமேஸ்வரம் மல்லிகை நகர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்(16) என்பவர் லட்சுமண தீர்த்தம் அருகே சென்று கொண்டிருக்கும் போது கீழே கிடந்து பணப்பையை எடுத்துள்ளார். பின் உடனடியாக அருகிலுள்ள இராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். மேற்படி காவல் ஆய்வாளர் விசாரணை செய்தபோது வேர்க்கோடு பகுதியைச் சேர்ந்த சதீஷ் (26) என்பவர் தான் வைத்திருந்த 14,550 ரூபாய் பணத்தை தவற விட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சதிஷ் அவர்களை காவல் நிலையம் வரவழைத்து காவல் ஆய்வாளர் முன்னிலையில் கார்த்திகேயன் அவர்கள் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தார்.