கடலூர் : கடந்த வாரம் சாவடி சக்தி கணபதிநகரை சேர்ந்த திருமதி சுகந்தி வயது 29, என்பவர் தனது சகோதரருடன் கே.வி டெக்ஸ் துணி எடுக்க கையில் பணத்துடன் சென்று கீழே இறங்கியபோது கையில் இருந்த பணப்பை காணவில்லை, இந்நிலையில் போக்குவரத்து பிரிவு பெண்காவலர் திருமதி லதா அவர்கள் உட்லண்ஸ் பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு கிடந்த பையை எடுத்து சோதனை செய்து பார்த்தபோது அதில் ரூபாய் 19,800 பணம் 2 ஏ.டி.எம் கார்டு இருந்ததை கண்டு போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. மகாலிங்கம் அவர்களிடம் ஒப்படைத்தார்.
போக்குவரத்து பிரிவு போலீசார் புதுநகர் காவல் நிலையம் சென்று பணம் தேடி யாராவது வந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறியதன் பேரில் பணம் தொலைத்த சுமதி என்பவர் காவல் நிலையம் வந்து புகார் அளித்தபோது விசாரித்து அவருடைய பணம் தான் என்பதை தெரிந்து மேற்படி பணத்தை கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி சாந்தி அவர்கள் பணத்தை ஒப்படைத்தார்கள்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்