மதுரை : எல்லையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சமயநல்லூர் ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்த லோகேஷ் ராஜ் (21) என்பவர் கீழே கண்டெடுக்கப்பட்ட 3 பவுன் தங்க சங்கலியை சோழவந்தான் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததார். இந்த தகவலை சமூக வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்து காவல் நிலையம் வந்த, நகையின் உரிமையாளரான தச்சம்பத்தை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மனைவி பரமேஸ்வரி என்பவரிடம் விசாரித்து 3 பவுன் தங்க நகையை நேற்று 25.05.20 ம் தேதி காவல் ஆய்வாளர்,திரு. ராமநாராயணன் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது. பின்னர் கல்லூரி மாணவர் லோகேஷ்ராஜை காவல்துறையினரும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்


T.C.குமரன் T.N.ஹரிஹரன்