தென்காசி : சங்கரன்கோவில், திருவேங்கடம் சாலையில் காவலர் திரு.அசோக் அவர்கள் பணியில் இருந்த போது அந்த சாலையின் நடுவில் ஏற்பட்ட பள்ளத்தில் வாகனங்கள் செல்ல சிரமப்படுவதை அறிந்தார். உடனடியாக கற்கள் கொண்டு அந்த பள்ளதை சரி செய்து வாகனங்கள் எளிதாக செல்ல வழிவகை செய்து கொடுத்தார். பொதுமக்களின் சிரமத்தை அறிந்து துரிதமாக செயல்பட்டு பள்ளத்தை சரிசெய்து கொடுத்த காவலரின் மனிதநேயமிக்க செயலை வாகன ஓட்டிகளும்¸ சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
ஜோசப் அருண் குமார்