இராமநாதபுரம் : கடந்த ஜனவரி 11ந்தேதி ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த உச்சிபுளி SI திரு.ஜெயபாண்டி அவர்கள் மீது தாக்குதல் நடத்திய நாகாச்சி தேவர்நகர் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் 21/2020 மற்றும் முகேஷ்கண்ணன் 20/2020 ஆகியாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.V.வருண்குமார், IPS., அவர்கள் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் மேற்படி எதிரிகளை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டதையடுத்து இருவரும் இன்று 04.03.2020 ம் தேதி மதுரை மத்தியசிறையில் அடைக்கப்பட்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்