சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிவகங்கை உட்கோட்டம், சாலைகிரமாம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு வலசை கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது தந்தை ராமு உயிரிழந்து விட்ட நிலையில் மன அழுத்தத்தில் கடந்ந 5 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு சென்று தன்னை கொன்றுவிடுமாறு கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதையறிந்த சாலைகிராமம் சார்பு ஆய்வாளர் திரு.பிரேம்குமார் அவர்கள் அவரை தேடி அழைத்து சென்று சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் உள்ள மனநல பிரிவில் சேர்ந்து விட்டு தேவையான உதவிகளையும் செய்தார். அவரின் இத்தகைய மனித நேயமிக்க செயல் பொதுமக்களிடையே பாராட்டுகளை பெற்றது.