வேலூர் : வேலூர் மாவட்டம், குடியாத்தம் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, அக்ராவரம் ஏரி பட்டறை கிராமம், பூங்குளம் மலையடிவாரம் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு இரகசிய தவகல் கிடைத்தது.
இதனையடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வகுமார் அவர்களின் உத்தரவின்பேரில், காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில், குடியாத்தம் கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பு திரு.இலக்குவன் தலைமையில், குடியாத்தம் நகர காவல் உதவி ஆய்வாளர் திரு.மணிகண்டன் மற்றும் திரு.கார்த்திக், சிறப்பு உதவியாளர் திரு.சக்கரவர்த்தி, முதல்நிலைக் காவலர் திரு.வினோத்குமார் ஆகியோர் தணிக்கை செய்து, மேற்படி சம்பவ இடத்தில் 400 லிட்டர் ஊறல் அழிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் இருந்த இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய முருகன், குமார், சுரேஷ் முருகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்