கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.மூர்த்தி, தலைமையிலான போலீசார் கல்வராயன்மலையில் உள்ள சிறுகல்லூர் வனப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3.600 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனர்.