திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் வேலங்குடி சோதனைச்சாவடி வழியாக பாண்டிச்சேரி சாராய பாட்டில்களை கடத்தி வந்த நன்னிலம் தாலுக்கா, கூத்தனூர், மேலதெருவை சேர்ந்த சேகர் மகன் சதிஷ்குமார் 25. என்பவர் கைது செய்யப்பட்டார்.
மேற்படி, நபர் கடத்தி வந்த 120 – பாண்டிச்சேரி சாராய பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறப்பாக செயல்பட்டு சாராய கடத்தலில் ஈடுப்பட்ட நபரை கைது செய்த நன்னிலம் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் திருமதி.அருள்ஜோதி மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.,(Agri)., அவர்கள் பாராட்டினார்கள்.
பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் மது கடத்தல் மற்றும் கள்ளசந்தையில் மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.,(Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.