சென்னை: சென்னையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து, கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளதின் தொடர்ச்சியாக, M1 மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் 18.05.2021 அன்று மாலை மாதவரம், பொன்னியம்மன் மேடு, வாசுதேவன் தோட்டம், எண்.9 என்ற முகவரியில் உள்ள வீட்டை சோதனை செய்து, அங்கு விற்பனைக்காக சட்டவிரோதமாக சாராயத்தை பதுக்கி வைத்திருந்த ஆனந்தராஜ், வ/49, மாதவரம் என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து மேற்படி வீட்டில் மறைத்து வைத்திருந்த 300ML அளவு கொண்ட 17 கள்ள சாராய பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு, அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.