பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி, பெரம்பலூர் உட்கோட்ட காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பழைய சாராய குற்றவாளிகளை நேரில் அழைத்து கலந்தாய்வு கூட்டத்தினை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.அ.சுஜாதா மற்றும் அவரது குழுவினர் நடத்தினார்கள்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மனம் திருந்து வாழும் பழைய சாராய வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மறுவாழ்வுக்காக அரசு உதவி தொகை வழங்க வழிவகை செய்வதற்காக அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார்கள்.
மேலும் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் ஊரல் போடுதல், காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய செயல்கள் தங்களது பகுதியில் நடைப்பெற்றால் 10581 என்ற இலவச தொலைப்பேசி எண் அல்லது 94981-00690 என்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக எண்ணிலும் அல்லது காவல் ஆய்வாளர் திருமதி.தமிழரசி அவர்களின் 94981-10434 என்ற தொலைப்பேசி எண்ணிலும் அல்லது பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.அ.சுஜாதா ஆகிய எண்ணுடைய 94981-49123 தொலைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என்று துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பின்னர் கொரோனா குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினார்கள். மேலும் தகவல் சொல்பவர்களின் இரகசியம் காக்கப்படும் என்று கூறினார்.