பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம்,வேப்பந்தட்டை தாலுகா,திருவாளந்துறை கிராமத்தில் அந்நிய நபர்கள் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயம் தயாரிப்பதாக கிடைத்த இரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் வி.களத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு.சரவணன், திரு.ஜெயராமன் மற்றும் பழனிவேல் ஆகியோர்கள் திருவாளந்துறை கிராமத்தின் அருகே உள்ள சட்டி பண்ணை என்னும் குடிசை வீட்டில் சோதனையிட்ட போது அங்கு மர்ம நபர்கள் 10 பேரல்களில் 1000 லிட்டர் மதிப்புள்ள நாட்டு சாராய ஊரல் இருந்தது தெரியவந்தது. அதே இடத்தில் அழிக்கப்பட்டது.
மேலும் மேற்படி ஊரல் போட்ட நபர்கள் யார் என சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.