சேலம் : சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.இரா.சிவக்குமார் அவர்களின் உத்திரவின் பேரில், ஆத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.நாகராஜன் அவர்களின் மேற்பார்வையில், கெங்கவல்லி காவல் சரகத்தில் சட்டத்திற்கு புறம்பாக கள்ளச்சாராயம், சந்து கடை மற்றும் போதைப்பொருட்கள் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கெங்கவல்லி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக கள்ளச்சாராயம் மற்றும் அரசு மதுபானங்களை சட்டத்திற்கு புறம்பாக விற்றுவந்த கெங்கவல்லி, இந்திரா காலணியை சேர்ந்த முத்துசாமி மகன் ராஜா, கெங்கவல்லி, சாணார் தெருவை சேர்ந்த ஜெயபால் மகன் ரமேஷ், கெங்கவல்லி, ஒதியத்தூர் கிராமம், தெற்கு தெருவை சேர்ந்த தனசேகர் மனைவி பரிமளா, கெங்கவல்லி, 74 கிருஷ்ணாபுரம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மேகநாதன் மனைவி லதா, கெங்கவல்லி,கூடமலை கிராமம், மேல வீதியை சேர்ந்த துரைசாமி மகன் சக்திவேல் ஆகியோர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு சட்டப்படி கெங்கவல்லி காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன் அவர்கள், வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டார். மேற்கண்ட ஐந்து நபர்களும் வழக்கமாக மதுவிலக்கு சம்மந்தப்பட்ட குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த காரணத்தால் மேற்கண்டவர்களை ஆத்தூர் உட்கோட்ட நிர்வாக நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் ஆஜர்படுத்தப்பட்டு 110 CrPC-இன் படி நன்னடத்தைக்கான பிணைப்பத்திரம் பெறப்பட்டது.
நன்னடத்தைக்கான பிணைப்பத்திரம் பெறப்பட்டிருந்த நிலையில் மேற்கண்ட ஐந்து மதுவிலக்கு குற்றவாளிகளும் நன்னடத்தைக்காண பிணைப்பத்திரம் அமலில் இருந்த காலத்தில் தொடர்ந்து மதுவிலக்கு சம்மந்தபட்ட குற்றங்களில் ஈடுப்பட்டு வந்த காரணத்தால் மேற்கண்ட ஐந்து மதுவிலக்கு குற்றவாளிகளை கெங்கவல்லி காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன் அவர்கள் ஆத்தூர் உட்கோட்ட நிர்வாக நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் ஆஜர்படுத்தி விசாரணை முடிவில் நன்னடத்தைக்காண பிணைப்பத்திரத்தை மீறிய குற்றத்திற்காக ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 50,000 அபராதம் அல்லது அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில் மீதமுள்ள காலத்திற்கு சிறை தண்டனை விதித்து ஆத்தூர் உட்கோட்ட நிர்வாக நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.சரண்யா அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேற்படி உத்தரவின் படி ஐந்து மதுவிலக்கு குற்றவாளிகளும் அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டு அரசு கணக்கில் ரூபாய் 2.5 லட்சம் அபராதம் செலுத்தினார்கள். மேற்படி உத்தரவால் ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் தாலுக்காவிலுள்ள மதுவிலக்கு சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் கலக்கத்தில் உள்ளார்கள். மேலும் சட்டத்தை மீறி கஞ்சா, கள்ளச்சாராயம், குட்கா, பான்மசாலா இதுபோன்ற போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.இரா. சிவக்குமார் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்