கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி காவல் நிலைய பகுதி கூரம்பட்டி கிராமம் தேனோடை பகுதியில் குற்றவாளியின் வீட்டின் பின்புறம் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டு வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நாகரசம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று. சோதனை செய்த போது.
குற்றவாளியை கைது செய்து அவரிடமிருந்து 5 லிட்டர் சாராயம், 200 லிட்டர் ஊறல், மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து.
ஊறல், சாராயம் சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்து குற்றவாளியுடன் காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.